- முத்துப்பேட்டை
- கலியமூர்த்தி
- வடுகநாதன்
- புவனேஸ்வரி
- மருதங்கவெளி தோப்பு
- முத்துபேட்டை, திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை, செப்.25: முத்துப்பேட்டையில் பெண் மாயமானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பு பகுதியான கலியமூர்த்தி மகன் வடுகநாதன்(55) இவரின் மனைவி புவனேஸ்வரி இருவருக்கும் திருமணமாகி 32வருடங்கள் ஆகிறது.
இந்தநிலையில் சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கபட்டு காணப்பட்ட புவனேஸ்வரி அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கததால் அவரது கணவர் வடுகநாதன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் சிங்கார வேல் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
