திருவிடைமருதூர், செப்.25: திருவிடைமருதூர் அருகே மல்லாபுரம் ஊராட்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், வீட்டின் உரிமையாளரான ஜான் பீட்டர் ஆறுதல் கூறியதுடன் ரூ.8000 பணம், வேட்டி மற்றும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செ.ராமலிங்கம், திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் இரா.கருணாநிதி மல்லாபுரம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் டி.வி.எஸ். சிலம்பரசன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஊராட்சி கழக செயலாளர் செல்வராஜ் மற்றும் கும்பகோணம் தாசில்தார் மல்லபுரம் விஏஓ அரசு சார்பிலும் அமைச்சர் சார்பிலும் நிவாரணம் வழங்கப்பட்டது.
