பொன்னமராவதி, செப்.25: பொன்னமராவதி நாடக நடிகர் கண்ணனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்தவர் நாடக நடிகர் பபூன் ஆறுமுகம் மகன் கண்ணன் இவர், தனது தந்தையைப்போலவே நாடகத்தில் பபூனாக பல ஆண்டுகளாக நடித்து வருகிறார்.
இப்போது, சின்னத்துரை, சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழக அரசு நாடக நடிகர் கண்ணனுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு அரசியல் கட்சியினர், சேவை அமைப்பினர், பூக்குடி வீதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது தந்தை ஆறுமுகத்திற்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
