×

பெரம்பலூர் கூட்டுறவுத்துறை சார்பாக வேளாண் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

பெரம்பலூர், செப்.25: பெரம்பலூர் கூட்டுறவுத்துறை சார்பாக வேளாண் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று 24ம் தேதி சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 அன்று பெரம்பலூர் கூட்டுறவுத்துறை சார்பாக பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை தொடர்பான கருத்தரங்கில் வேளாண் கல்லூரி முதல்வர் ஆர் அருள்மொழியன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.

துணைப்பதிவாளர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவக்குமார் அவர்கள் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்கப்படும் விளக்கவுரையாற்றினார். பெரம்பலூர் சரக துணைப்பதிவாளர் இளஞ்செல்வி வங்கியில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பற்றி உரையாற்றினார்.

அதன் பிறகு வேளாண் கல்லூரி வளாகத்தில் மரம் நடும் விழாவினை துறை அலுவலர்கள் துவக்கிவைத்தனர், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் கண்காணிப்பாளர்கள் இரா சோ ரமேஷ், ரா மோகன்ராஜ், மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் விவேகபாரதி, பெரம்பலூர் கள அலுவலர் ர பிரியங்கா மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெரம்பலூர் கள மேலாளர் வி.சீனிவாசன் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் மாணவ,மாணவிகள் மற்றும் கெளசிகள் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். வேளாண் கல்லூரி விரிவுரையாளர் நந்தினி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.

 

Tags : Perambalur Cooperative Department ,Perambalur ,College ,International Year of Cooperatives 2025 ,Perambalur Thanalekshmi Srinivasan Agricultural College ,
× RELATED மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை...