×

மாவட்டம் முழுவதும் பாமகவினர் போராட்டம்

அரூர், டிச.24: கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூரில் பாமக சார்பில் நடந்த போராட்டத்தில், பொறுப்பாளர்கள் அன்னை முருகேசன், ஐயப்பன், முரளி, திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கம்பைநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் அரசாங்கம், மதியழகன், வன்னியபெருமாள், பலராமன், சங்கர், சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செயல் அலுவலர்களிடம் மனு வழங்கினர். பாலக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகம் முன், மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில், மாரண்டஅள்ளி 4 ரோட்டில் இருந்து பேரணியாக வந்து, செயல் அலுவலரிடம் மனு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் குமார், வடமேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் கோவிந்தராஜ், மாநில மகளிரணி சரவணகுமாரி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தூர்: கடத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில், முன்னாள் எம்எல்ஏவும், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் மனு கொடுத்தனர்.
காரிமங்கலம்: காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், செல்வம், மனோகரன், சத்யா, அசோக்குமார், சம்பத், ஸ்ரீசிவம் சஞ்சீவன் உள்ளிட்டோர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன், தொகுதி அமைப்பு செயலாளர் சுதா கிருஷ்ணன் தலைமையில், மாநில துணை தலைவர் சாந்த மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞர் சங்க துணை தலைவர்கள் சத்தியமூர்த்தி, மந்திரி படையாட்சி, மாவட்ட கவுன்சிலர் மாது உள்ளிட்டோர் பேரூராட்சி செயல் அலுவலர் கீதாவிடம் மனு கொடுத்தனர்.

Tags : Bamakavinar ,district ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...