×

மக்கள் குறைகளை தெரிவித்து பயன்பெற அழைப்பு

 

திருமயம்,செப்.24: திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (25ம் தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
அது சமயம் திருமயம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை மனுவாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். கூட்டத்தில் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : ENWARYA CHIEF ,ANANDAI ,Office of the Executive Director ,Pudukkottai District ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...