×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 3 கிராமத்தில் 1000 பேர் மனு

 

சீர்காழி, செப். 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம்,திருநகரி, நெப்பத்தூர் பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் மங்கைமடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமில் திருநகரி, மங்கைமடம், நெப்பத்தூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 15 துறை சார்ந்த கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களாக பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் குடும்பத் தலைவிகளால் அளிக்கப்பட்டு உடனடியாக திருநகரி, நெப்பத்தூர்ப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்த முகாமினை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Tags : Stalin Project Camp ,Sirkazhi ,Stalin Camp ,Mangaimadam ,Thirunagari ,Neppathur ,Mayiladuthurai district ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...