×

வெ.இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பண்ட் அவுட்

 

பெங்களூரு: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்காக வீரர்கள், தங்களது உடல்திறனை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் விளையாடிய 4வது டெஸ்ட் (மான்செஸ்டர்) போட்டியில், அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், உடல் தகுதியை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், துருவ் ஜூரல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாட இருக்கிறார்.

 

Tags : West Indies ,Bengaluru ,India ,BCCI ,West Indies Test ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...