- மாநில போக்குவரத்து நிறுவனம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்
சென்னை: ரயில்கள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை போல மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பேருந்து பயணத்தின் போது குடிநீர் தேவைப்பட்டால் பயணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமக் காலம், விண்ணப்பிக்கும் முறை, செலுத்த வேண்டிய முன்வைப்பு தொகையை இணையம் மூலம் அறியலாம். மேலும் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான விவரங்களை www.tntenders.gov.in என்ற இணைதளத்தில் அறிந்து கொள்ளலாம். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
