×

மைக்செட் அமைப்பதில் தகராறு போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்

 

குன்னூர், செப். 23: எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி குன்னூரில் மைக்செட் அமைப்பதில் போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவரது 5ம் கட்ட சுற்றுப்பயணம் இன்றும் (செப்.23), நாளையும் (செப்.24) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்று குன்னூர் பஸ்நிலையம் முன் எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை சந்திக்க உள்ளார். அதற்காக குன்னூரில் அதிமுகவினர் மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குன்னூர் நகர போலீசார் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் கூடாரம் அமைத்து அங்கு மைக்செட் வைத்தனர். இதனால், அதிருப்தி அடைந்த போலீசார், முறையாக அனுமதி பெறாமல் இங்கு எவ்வாறு கூடாரம் அமைத்தீர்கள்? என்பது குறித்து அதிமுகவினர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, அங்கு வந்திருந்த ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, குன்னூர் நகர அதிமுக செயலாளர் சரவணகுமார் ஆகியோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK ,Coonoor ,Edappadi Palaniswami ,General ,Tamil Nadu ,2026 assembly elections ,
× RELATED ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்