சென்னை : இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் Chennai One மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் ஆட்டோக்களை ஒரே QR Code-ஐ பயன்படுத்தி இனி டிக்கெட் பெறலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் செயலியை பயன்படுத்தலாம்.
