×

முசிறி, தொட்டியம் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

முசிறி, செப்.22: திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாலய அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களு க்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி மாத மகால்ய அமாவாசை என்பதால் காவிரி ஆற்றில் அதிகாலை
முதலே பக்தர்கள் புனித நீராடினர்.

அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் மூலம் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு வாழை இலையில் காய்கறிகள், பச்சரிசி, வாழைப்பழம், மளிகை பொருட்கள், கீரை வகைகள் ஆகியவற்றை படைய இட்டு வழிபாடு செய்து, திதி கொடுத்து, பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.இவ்வாறு செய்வதால் இறந்து போன தங்களது முன்னோர்கள் தங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags : Musiri ,Thottiyam ,Cauvery River ,Musiri, Trichy district ,Thai ,Aadi ,Purattasi month ,Mahalaya ,
× RELATED சோமரசம்பேட்டையில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரை