×

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபயணம்

 

தஞ்சாவூர், செப்.22: தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறையில் சிறப்பு தூய்மை பிரச்சாரம் 5.0 செப்டம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தங்கமணி தலைமையில் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் துவங்கிய நடைபயணம், பழைய பேருந்து நிலையம், கோர்ட் ரோடு வழியாக பெரிய கோவில் வரை சென்றது.

 

Tags : Thanjavur Postal Division ,Thanjavur ,Indian Postal Department ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...