×

செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு கரூர் சுக்காலியூர் ரவுண்டானா அருகே லாரி- வேன் ேமாதல்: போக்குவரத்து பாதிப்பு கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கரூர், டிச. 23: கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் 23ம்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நான்கு தொகுதிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டன. இன்று காலை 10மணியளவில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியம் சார்பில் சேந்தமங்கலம் மேல்பாகம் நவமரத்துப்பட்டியில் மாலை 5 மணியளவில் துவங்கி நான்கு தொகுதிகளிலும் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Tags : Senthilpalaji ,Karur ,roundabout ,lorry-van collision ,Sukkaliyur ,executive committee meeting ,district ,DMK ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது