- மொடக்குரிச்சி
- வெங்கம்பூர் பஞ்சாயத்து
- பசுமையாக்கும் திட்டம்
- ஈரோடு
- தனலட்சுமி தங்கமுத்து
- துணைத்தலைவர்
- நிலசெல்வி திருநாவுக்கரசு
- நாடாளுமன்ற உறுப்பினர்…
ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் நகர்புற பசுமையாக்கள் திட்டத்தில் மரம் நடு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தங்கமுத்து தலைமை தாங்கினார். வெங்கம்பூர் பேரூராட்சியின் துணைத்தலைவர் நிலாசெல்வி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாவட்ட வனச்சரக அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் விழாவில் மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வெங்கம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வரதராஜ பெருமாள் கோயில் வகையறா செயல் அலுவலர் சாந்தி மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சூர்யா.சிவகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
