×

பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு

ஓசூர், செப்.22: ஓசூரில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை எம்எல்ஏ, மேயர் திறந்து வைத்தனர். ஓசூர் மாநகராட்சி 31வது வார்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில், புதிதாக பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர திமுக செயலாளர் மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், பகுதி செயலாளர் ராமு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் மோசின்தாஜ் நிஷார், வார்டு செயலாளர் குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Ozur ,MLA ,Mayor ,Hosur ,31st Ward of Hosur Municipality ,Assembly Constituency ,Fund ,
× RELATED சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்