×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காரிமங்கலம், செப். 22: காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஏ.முருக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22ம் தேதி) முருக்கம்பட்டி ஊராட்சியில் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில், பல்வேறு அரசு துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை முகாமில் அளித்து பயன்பெற வேண்டுமாய் பிடிஓ.,க்கள் தனலட்சுமி, சர்வோத்தமன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Tags : Stalin Project ,Camp ,Karimangalam ,Bandaralli ,Murukkampatti ,with You ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...