×

சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் சாத்விக், சிராக் இணை இறுதிக்கு முன்னேற்றம்

ஷென்ஜென்: சீனாவின் ஷென்ஜென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை துவக்கம் முதல் அதிரடியாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றது.

அதனால், அரை இறுதிக்கு முன்னேறிய அவர்கள் நேற்று நடந்த போட்டியில், மலேசியாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன்களான, ஆரோன் சியா, ஸோ வூய் யிக் இணையுடன் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

 

Tags : China Masters Badminton ,Satwik ,Chirag ,Shenzhen ,Shenzhen, China ,India ,Satwik Sairaj Rankireddy ,Chirag Shetty ,
× RELATED பிட்ஸ்