×

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னோடிகளுக்கு பொற்கிழி

பொன்னேரி:  மீஞ்சூர் தெற்கு  ஒன்றிய திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலி மூலம் உரையாற்றினார். இதில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  டி.ஜெ.கோவிந்தராஜன்  ஆலோசனையின்படி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில், மூத்த முன்னோடிகளுக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் 160 நபர்களுக்கும், மீஞ்சூர் பேரூர் சார்பில் 20 நபர்களுக்கும் பொற்கிழி வழங்கப்பட்டது. இதனுடன் பாராட்டு பத்திரம், நினைவுப்பரிசு, கேடயம், பதக்கம், கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மீ.வி.கோதண்டம், நிலவழகன், சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் ரவி, நிர்வாகிகள் தன்சிங், சிவராமன், வல்லூர் தமிழரசன், ராஜா, பாளையம் முனுசாமி, சக்திவேல், கஸ்தூரி தசரதன், ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஜோதி முருகன், மணிமாறன், காசி, ஐயப்பன், ராஜேந்திரன், பாண்டுரங்கன், லெனின், நித்யகுமார், 15வது வட்ட செயலாளர் முரளி, ஆவூர் அருள், ஏகாம்பரம், அண்ணதாஸ், தமிழரசன், கார்த்திக், விக்னேஷ் உதயன், கலைவாணன், லோகநாதன், ஜெகன், தமிழ்க்குடிமகன், தொண்டரணி நாகராஜ் மற்றும் 25.ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,  அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள். வார்டு செயலாளர்கள், மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : pioneers ,Minsur Southern Union DMK ,
× RELATED அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...