×

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

 

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். அதேபோல் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம் குங்குமம், விபூதி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடாலூர் திருவளக்குறிச்சி, இரூர், பெருமாள்பாளையம், சீதேவிமங்கலம், ஆலத்தூர்கேட், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், காரை, செட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

 

Tags : Purtasi ,Badalur Bomalai Sanjevirayar Malaikoil ,Batalur ,Puratasi ,Batalur Taluga Batalur Bamalai Sanjeviraya Mountain Temple ,Perumal Temple ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்