×

வக்பு திருத்த சட்டம் ரத்துகோரி டெல்லியில் நவ.16ல் மாநாடு: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய வக்பு வாரியத்தில் அதிகபட்சம் 4 இஸ்லாமியர் அல்லாதவரும், மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது அரசமைப்புக்கு எதிரானது. இந்து அல்லாதவர்கள் இந்து அறநிலையத்துறையில் உறுப்பினர்களாக ஆக முடியாது. ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சொல்வது பாரபட்சமானது.

வக்பு திருத்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி நவம்பர் 16ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், மமகமாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஏ.ஷேக்முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Delhi ,Jawahirullah ,Chennai ,MLA ,Humanity Party ,Supreme Court ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...