- திருச்சி
- திருச்சி விமான நிலையம்
- சகாப்தீன்
- கோட்டையப்பட்டினம், மணல்மேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- திருச்சி சர்வதேச விமான நிலையம்
- புரூணை
திருச்சி, செப். 19: திருச்சி ஏர்போர்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி, கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் சகாப்தீன்(41). இவர் கடந்த 16ம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு புருனே நாட்டிலிருந்து வந்தார்.
இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தாய் பெயர், பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட்டில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து சகாப்தீனை கைது செய்தனர்.
