×

ஒரத்தநாடு மின்வாரியத்தில் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடக்கிறது

தஞ்சாவூர், செப். 18: ஒரத்தநாடு மின் வாரிய கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை கோட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (18ம்தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

அதுசமயம் ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யுண்டார்கோட்டை, கண்ணுகுடி மேற்கு, மேலஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாபேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களைச் சார்ந்த பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு செயற்பொறியாளர் நல்லையன் (பொ) கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags : Grievance Redressal Day ,Orathanadu Electricity Board ,Thanjavur ,Thanjavur Divisional Superintending Engineer ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...