×

தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர், டிச. 22: மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் அனைத்துவகை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற்பொறியாளர் மேகலா, உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அகஸ்டின் பேசுகையில், மின்வாரியத்தில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணியிடங்களை தனியாருக்கு விற்கும் வாரிய உத்தரவு -82 திரும்ப பெரும் வரை தமிழகம் முழுவதும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கள பணியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என அனைத்துநிலை ஊழியர்கள் என 800க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்றார். இதையடுத்து மத்திய அரசை கண்டித்தும், மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்றும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் மின்வாரியத்தில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.

Tags : Power plant workers ,
× RELATED வாலிபர் கைது பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்