×

புரட்டாசி மாதம் பிறப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வருகை நேற்று அதிகளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் வெளியே அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 18 முதல் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சர்வதரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 7 மணி நேரமும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் 63 ஆயிரத்து 67 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Purattasi ,Tirumala ,Lord ,Perumal ,Tirupati ,Ezhumalaiyan Temple ,Lord Shiva ,Purattasi month ,Vaikuntam Q Complex ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு