×

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் தாயார் வீடியோவை உடனே நீக்க வேண்டும்: காங்கிரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி, அவரது தாயார் ஹீராபென் மோடி ஆகியோரை சித்தரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பீகார் மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட வீடியோவில் மரணமடைந்த ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் கனவில் வந்து பேசுவது போலவும், தேர்தல்களில் வாக்குகளை பெற அவர் தன்னை பயன்படுத்துவதற்காக பிரதமர் மோடியை விமர்சிப்பது போலவும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பாஜ பிரமுகர் விவேகானந்த் சிங் வழக்கு தொடர்ந்தார்.இந்த விவகாரம் குறித்த வழக்கு நேற்று பாட்னா உயர்நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பஜந்தரி, சர்ச்சைக்குரிய வீடியோவை உடனே நீ்க்கும்படி காங்கிரசுக்கு உத்தரவிட்டார்.

Tags : Modi ,Congress ,New Delhi ,Bihar State Congress ,Hiraben Modi ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...