×

தர்மஸ்தலாவில் மீண்டும் சோதனை பல எலும்புகள் கிடைத்தது

மங்களூரு:கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக அங்கு பணிபுரிந்த சின்னையா என்பவர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர் கூறிய இடங்களில் தோண்டி பார்த்தனர். எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் சின்னய்யா கூறியது பொய் என கருதிய சிறப்பு போலீசார் அவரை கைது செய்து ஷிவமொக்கா சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சமூக அலுவலர்கள் பங்களா குட்டே அளித்த புகாரில் நேற்று விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சிலரும் சேர்ந்து பங்களாகுட்டே பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல எலும்பு பாகங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Dharmasthala ,Mangaluru ,Chinnaiah ,Dharmasthala, Karnataka ,Dharmasthala police station ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...