×

வள்ளலார் சத்திய ஞானசபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

வடலூர், செப். 18: வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் தமிழ் ஆண்டின் புரட்டாசி மாதத்தின் மாத பூச ஜோதி தரிசனம் பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று இரவு 7.45 மணி முதல் சத்திய ஞான சபையில் ஆறு திரைகளை நீக்கி புரட்டாசி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் செய்தனர். இதனை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் திரண்டு இருந்தனர். ஜோதி தரிசனத்தை தொடர்ந்து தர்மசாலை, சபை வளாகத்தில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Purattasi ,Vallalar ,Sathya Gnanasabhai ,Vadalur ,Arutprakasha Vallalar ,Poosa ,
× RELATED மயிலம் அருகே மரத்தின் மீது தனியார் பஸ் மோதி விபத்து: 7 பேர் காயம்