×

மகாளய அமாவாசை, வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: 21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது. 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது. மேலும் வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 19ம் தேதி 355, 20ம் தேதி 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது

Tags : Mahalaya Amavasai ,Chennai ,Mahalaya New Moon ,Rameshwarat ,Rameshwar ,Salem ,Goa ,Bangalore ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்