டெல்லி: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தரப்பில் 12 கடிதம் வழங்கியும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்று பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். தங்களது கடிதத்தை பரிசீலிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. ராமதாஸ் தரப்பு கடிதங்களை ஆணையம் பரிசீலிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
