×

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடந்தது

ஏரல், டிச. 21: ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல், சாயர்புரம், பெருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளின் பூத் கமிட்டி கூட்டம் ஏரலில் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.

நிர்வாகிகளுக்கு கட்சி வேஷ்டி வழங்கிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித திட்டமும் செயல்படவில்லை. இதற்கு மாற்றாக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். வரும் தேர்தலில் நாம் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்றார்.
வட்டார தலைவர்கள் ஸ்ரீ வை. மேற்கு நல்லக்கண்ணு, கிழக்கு தாசன், ஆழ்வை மேற்கு கோதண்டராமன், கிழக்கு பாலசிங் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் நகர தலைவர்கள் ஏரல் பாக்கர்அலி, சாயர்புரம் ஜேக்கப், பெருங்குளம் மூக்காண்டி, ஸ்ரீ வைகுண்டம் சித்திரை, ஆழ்வை சதீஸ்குமார், ஸ்ரீவை. யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, பொதுச் செயலாளர் இசைசங்கர், ஒபிசி முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட்பிரபாகரன், ஸ்ரீ வை. ஊடகபிரிவு தலைவர் மரியராஜ், தூத்துக்குடி காங்கிரஸ் எடிசன், சிறுத்தொண்டநல்லூர் குணமால், ஏரல் பிஸ்மிசுல்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Congress Booth Committee Executives Consultative Meeting ,Urvasi Amirtaraj ,
× RELATED இளைஞர்கள் மொபைலில் நேரம் வீணடிப்பதை...