×

தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.17: கலெக்டர் அலுவலகத்தில் தையல் கலைஞர்க் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். நலவாரிய பணப்பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும்.

கடை, வீடு சார்ந்த தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இலவச தையல் மிஷின் வழங்க வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைத்திட வேண்டும். 60 வயதான அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கார்மெண்ட்ஸ் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

 

Tags : Tailors Association ,Virudhunagar ,Virudhunagar Collector ,Tailors Association District ,President ,Pichaikani ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...