×

தேனியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

தேனி, செப்.17: தேனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில், நாளை மறுநாள் (செப்.19ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி நடக்க உள்ளது.

இம்முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள், நர்சிங் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Theni ,District Employment Camp ,Theni District Employment and Career Guidance Center ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...