- திமுக
- கனிமொழி
- திருப்பூர்
- திருப்பூர் மத்திய மாவட்டம்
- யூனியன்
- பகுதி மகளிர் அணி
- மகளிர் தன்னார்வக் குழு
- மத்திய மாவட்டம்
- செல்வராஜ் எம்எல்ஏ
- தெற்கு
- நகரம்…
திருப்பூர், செப். 17: திருப்பூர் மத்திய மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டா் அணியின் ஆலோசனை கூட்டம், மத்திய மாவட்ட செயலாளா் செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், மாநில மகளிர் தொண்டா் அணி துணை செயலாளா் மாலதி நாகராஜ், மலா் மரகதம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளா் கலைச்செல்வி, மகளிர் தொண்டா் அணி அமைப்பாளா் ஆனந்தி, மாவட்ட துணைச்செயலாளா் நந்தினி, மாநகர துணை செயலாளா் மகாலட்சுமி, மாநகர அமைப்பாளா் விஜயா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கரூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருது பெறும் தி.மு.க. துணை பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பிக்கு வாழ்த்து தெரிவிப்பது. விருது வழங்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
