×

வாக்காளர்கள் திருத்த முகாமில் நிர்வாகிகள் பங்கேற்கவேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அரியலூர், செப், 17: அரியலூர் மாவட்டம், திருமானூர் நடுராஜவீதியிலுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் அறிவுரைப்படி நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இயக்கத்தை தீவிரபடுத்துதல், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை votechoriroko.in http://votechoriroko.in/ இணையத்தில் பதிவு செய்தல். Applicatiom Form-6,7,8,8A கையாளுதல், வாக்காளர் முகாம் நடைபெறும்போது, முகாமில் இளைஞர் காங்கிரஸார் கலந்து கொண்டு பணிசெய்தல்.

அதிக அளவில் இளைஞர்களை, இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர் சேர்த்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருமானூர் நகர தலைவர் வினோத்குமார் கலந்து கொண்டார். அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்தி மரிய ஜான் பிரிட்டோ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் நிக்கோலஸ்ராஜ், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் திருமானூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாரதி நன்றி கூறினார்.

 

Tags : Congress ,Ariyalur ,Ariyalur Assembly Constituency Youth Congress ,District Youth Congress ,Thirumanur Nadurajaveediya, Ariyalur district ,Ariyalur District Congress ,President ,Shankar ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...