×

சீர்காழியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சீர்காழி, செப். 17: சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீர்காழி மின்சார வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரோனிக் ராஜ் மேற்பார்வையில் இன்று 17ம் தேதி புதன்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், மாதானம் ,அரசூர், பூம்புகார், காளி, மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில், ஆக்கூர், திருக்கடையூர், கிடாரங் கொண்டான், செம்பனார்கோயில்,  தரங்கம்பாடி, திருவெண்காடு, ஆகிய பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

 

Tags : Sirkazhi ,Sirkazhi Electricity Board ,Executive Engineer ,Murthy ,Sirkazhi Electricity Board Divisional ,Nagai Electricity Distribution ,Supervising ,Engineer ,Ronik Raj ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்