×

கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழியங்கும் கோவில்களில் இருந்து வரக்கூடிய நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பாக அரசு தரப்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. இதையடுத்தல்து அந்த அரசாணைக்கு எதிராக சிலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடத்தி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுமைதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில்கொண்டு வந்த இந்த அரசாணை சரியானதா இல்லையா என்பதை நாங்கள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது எனவே வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் இந்த இடைப்பட்ட காலத்தில் இது தொடர்பாக எதிர்மனுதாரர்கள் தரப்பு தங்களது தரப்பு விளக்கங்களை அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,Hindu Religious Endowments Department ,Madras High Court Madurai ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...