×

சண்டை நிறுத்தத்துக்கு தாங்கள்தான் இந்தியாவை அழைத்தோம்: பாகிஸ்தான் துணைப் பிரதமர் பகிரங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத்: சண்டை நிறுத்தத்துக்கு தாங்கள்தான் இந்தியாவை அழைத்தோம் என்று பாக். துணைப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தத்துக்கு தாங்கள்தான் இந்தியாவை அழைத்தோம். சண்டை நிறுத்தத்துக்கு உதவுமாறு அமெரிக்க அமைச்சரிடம் கேட்டோம். இருதரப்பு பிரச்சனை என இந்தியா உறுதியாக கூறிவிட்டதாக அமெரிக்க அமைச்சர் தெரிவித்தார். இந்தியா-பாக். மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் இஷாக் தர் தகவலால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : India ,Pakistan ,Deputy Prime Minister ,Islamabad ,Ishaq Dhar ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...