×

சென்னை முகப்பேரில் கஞ்சா போதையில் மாமூல் கேட்டு நிறைமாத கர்ப்பிணியை வெட்டிய கும்பல்

 

சென்னை: சென்னை பாடி பகுதியில் வேல்முருகன் மற்றும் அவரது மனைவியை கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்த மர்ம கும்பல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அண்ணா நகர் மேற்கு ரவுண்டு பில்டிங் அருகில் உள்ள மணிரத்தினம் வீட்டில் இருந்து மணிரத்தினம் என்பவரை தாக்கியுள்ளார்.

மணிரத்தினம் என்பவர் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவு குற்றவாளியாக இருக்கிறார். இவர் வீட்டில் நேற்று இரவு 11 மணி அளவில் குடும்பத்துடன் இருக்கும் போது அவரது நண்பரான சுனாமி சூரிய என்பவர் வீட்டில் வெளியில் இருந்து அவரை அழைத்துள்ளார். அப்போது மணிரத்தினம் வெளியில் வந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சுனாமி சூரியவின் நண்பர்கள் மூன்று பேர் அருகில் நின்று கொண்டிருந்தன.

சுனாமி சூரிய பேசிக்கொண்டிருக்கும் போது மணிரத்தினத்தை தாக்குவதற்காக அந்த மூன்று நபர்கள் அவரிடம் வந்துள்ளானர். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சல்லிட்டார்கள். உடனடியாக அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்ற போது சுனாமி சூரிய என்பவர் அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து சூரிய வீட்டின் முன்பு தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஜெ.ஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இது குறித்து அவர்கள் நண்பர்களிடம் இருக்கும் இன்ஸ்டாகிராம் ஐடி மூலமாக தனிப்படை அமைத்து அந்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags : Chennai Mukapere ,Chennai ,Velmurugan ,Badi ,Manratnam ,Anna Nagar West Round Building ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...