×

சென்னை வானகரத்தில் அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில், அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற சீனிவாசன் என்பவரை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து. தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பொதுமக்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட சீனிவாசன், போலீசாருடன் செல்ல மறுத்த ரகளையில் ஈடுபட்டார்

சென்னையில் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வேலப்பன்சாவடியை சேர்ந்த சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மதுரவாயல், ஆவடி போக்குவரத்து புலனாய்வு ஆகிய 2 காவல் நிலையங்களில் சாய் ஸ்ரீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இறப்பு ஏற்படும் வகையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

Tags : Chennai's Vanagaram ,Thiruvallur ,Vanagaram, Thiruvallur district ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...