×

திருத்துறைப்பூண்டியில் பொறியாளர் தின பேரணி

 

திருத்துறைப்பூண்டி, செப்.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டட பொறியாளர்கள் சங்க தலைவர் பொறியாளர் யோகநாதன் தலைமையில் பொறியாளர் தின நடைபெற்றது. டாக்டர் விஸ்வே சரய்யா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் மண்டல செயலர் சுப்பிரமணியன் சங்க கொடியினை ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் அய்யப்பன் பொறியாளர் உறுதிமொழி வாசித்தார். முன்னாள் மண்டல தலைவர்கள் சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் சரவணன் மற்றும் உடனடி முன்னாள் தலைவர் ரகுவரன் இருவரும் மன்னை சாலை தொடங்கி ஈசிஆர்வரை நடைபெற்ற பொறியாளர் சாலை ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர். முத்துகுமார் நன்றி கூறினார்.

Tags : Engineer's Day Rally ,Reduthurapundi Thiruthuraipundi ,Engineer's Day ,Thiruvarur District Civil Engineers Association ,Engineer ,Yoganathan ,Dr ,Wisway Saraya Thiruvuruva ,Former ,Zonal Secretary ,Supramanian Sangh ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...