- வடக்கு நகர தி.மு.க.
- அண்ணா
- திருப்பூர்
- பேரறிஞர் அண்ணா
- திருப்பூர் புதிய பேருந்து நிலையம்
- மேயர்
- தினேஷ் குமார்
- வடக்கு சட்டமன்றம்
- தொகுதியில்
- பார்வையாளர்
- குமணன்
திருப்பூர், செப். 16: பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில், வடக்கு மாநகர தி.மு.க. சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மேயா் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளா் குமணன், மாநகர செயலாளா் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் அவைத்தலைவா் நடராசன், பொருளாளா் சரவணக்குமார், துணை செயலாளா்கள் தேவி முருகேசன், பகுதி செயலாளா்கள் போலார் சம்பத், கொ.ராமதாஸ், கவுன்சிலா்கள் ராதாகிருஷ்ணன், காந்தி, கோட்டா பாலு மற்றும் எம்.எஸ்.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
