×

கொடுமுடியில் அண்ணா பிறந்தநாள் விழா

 

கொடுமுடி,செப்.16: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி கொடுமுடி தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் நேற்று கொடுமுடி பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதில் கட்சியினரும் பொதுமக்களும் இணைந்து,அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கொடுமுடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,Kodumudi ,Tamil ,Nadu ,Chief Minister ,Perarignar Anna ,Kodumudi South Union DMK ,
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது