- சீமான்
- விஜய்
- அமைச்சர் I. பெரியசாமி
- திண்டுக்கல்
- அமைச்சர்
- I. பெரியசாமி
- மு.கே ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். 2026ல் அவர் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் ஆவார். தற்போது தொழில்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். பொழுதுபோக்கிற்காக மட்டுமே விஜய்யை பார்க்கிறார்கள். விஜய்யை சினிமாவில் பார்த்தோம். தற்போது நேரில் பார்ப்போம் என மக்கள் செல்கின்றனர்.
3வது இடத்திற்கு வர வேண்டுமென சீமானும், விஜய்யும் முயற்சி செய்கின்றனர். அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி 2வது இடத்திற்கு வர முயற்சி செய்கிறார். இவர்களால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது. ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி செய்கிறார். 234 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
