- சிவகங்கை
- மாவட்ட புள்ளிவிவர அலுவலகம்
- தமிழ்நாடு அரசு புள்ளியியல் அதிகாரிகள் சங்கம்
- சரவணகுமாரும்
- மாநில செயலாளர்
- தமிழ்
- நாடு…
சிவகங்கை, செப். 16: சிவகங்கையில் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க சங்கம் சார்பில் கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணக்குமார் வரவேற்றார்.மாநில செயலாளர் சரவணக்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். இதில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் 38 தொழில்நுட்ப பணியிடங்களை பறித்திடும் அரசின் அரசாணை 118ஐ ரத்து செய்ய வலியுறுத்தி பேசினர். பொருளாளர் அஷ்ரப் நிஷா பேகம் நன்றி கூறினார்.

