×

கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல்

கடத்தூர், டிச.21: கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், சிந்தல்பாடி, ராமியணஅள்ளி, தென்கரைகோட்டை, நத்தமேடு அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளுக்கு கண்கள் அருகே சிறுபுள்ளி போன்ற கொப்பளங்கள் ஏற்பட்டு வருகிறது. இது காற்றின் மூலமாக பரவுதால், அடுத்தடுத்து கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் போல் உள்ளது. எனவே, கால்நடைத்துறை அதிகாரிகள் கடத்தூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா