×

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி

பென்னாகரம், டிச.21: பென்னாகரம் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பென்னாகரம் அருகே மேற்கு கள்ளிபுரம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுக்கு முன்பு ₹5.60 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிநீர் தொட்டியின் கான்கிரீட் உதிர்ந்து, தூண்களில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், தண்ணீர் கசிந்து வருகிறது. குடிநீர் தொட்டிக்கு அருகில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு குழைந்தைகள் தினமும் விளையாடி வருகின்றனர். எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பாக பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா