×

சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்யக்கோரி மி.வா.அலுவலகம் முன்பு சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி, டிச. 21: கந்தர்வகோட்டை மின்வாரிய அலுவலகம் முன் பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்ன்றியத்தில் வெள்ளாவிடுதி கிராமம் உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பழுடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக இரண்டு முறை சமாதான கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்படி சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படாததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கந்தர்வகோட்டை மின் வாரிய அலுவலகத்தை கண்டித்து மின் வாரிய அலுவலகம் முன்பு சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீராசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் வாரிய அலுவலகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் அக்கட்சியை சேர்ந்த காளிமுத்து, ராஜேந்திரன், அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cone ,demonstration ,office ,
× RELATED வேற மாறி ஆபீஸ் 2வது பாகம் உருவாகிறது