×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தகநாளில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 81,786 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து 25,069 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 4408 நிறுவன பங்குகளில் 2337 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம் நிறைவு பெற்றது. 1883 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகம்; 188 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.

Tags : Mumbai ,Bombay Stock Exchange ,Sensex ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை!