சென்னை: சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நிகழ்ச்சி அனுமதிக்கான அட்டை காண்பித்தவுடன் வருகை தருபவர்களுக்கன கைப்பட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு பாராட்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் விழா நேரத்திற்கு முன்னதாகவே வருகை தரவேண்டும்.
பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டையை நுழைவிடத்தில் காண்பித்த உடன் அவர்களுக்கு கைப்பட்டை வழங்கப்படும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள 8 சிறப்பு கவுண்ட்டர்களில் பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் அனுமதி அட்டையை காண்பித்து இந்த கைப்பட்டையை பெற்றுக் கொள்ளலாம். கைப்பட்டையை கையில் அணிந்து கொண்டு நிகழ்ச்சி அரங்கிற்குள் சென்று பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
